கதவுகளும் பூட்டுகளும் - கோடை

Liberty with Slavery

கூண்டுகள் என்றாலும்
அவை கதவுகளோடே
உருவாக்கப்படுகின்றன

சாத்திய நொடியில்
பூட்டுவோர் மறந்தனர்
பூட்டுகளும் சாவியோடே
படைக்கப்பட்டதை

அவை நுழைவாயில்கள்தான்
என்றாலும் கூட
வெளியேற்றவும் செய்யும்

இந்த மதிலைச் சுற்றி
அகழிகளும் முதலைகளும் இல்லை
சாகச ஆசை கொண்டோர்
இப்போதே வெளியேறலாம்

மிஞ்சியோர்க்கு ஒரு செய்தி
இந்த மதிலுக்குள் இருக்கும்
சிறையில் அரசியல் கைதிகள் யாரும் இல்லை
ஆனால் அரசியல் உண்டு

பின்குறிப்பு:-
சாத்திய கதவுகள்
அனுமதிப்பதில்லை
ஒளியையும் வளியையும்
காதலையும்...

எழுத்து: கோடை
ஓவியம்: சாருமதி 
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.