கவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2

கம்பராமாயணத்தில்
ஒரு காட்சி. தங்கத் தேர் ஒன்று காட்டுப் பகுதியில் விரைந்து செல்கிறது.
தங்கத்தினாலான அந்தத் தேர்ச் சக்கரங்கள் ஏறிச் செல்வதால் வழியில் கிடக்கும் சிறு
சிறு கற்களெல்லாம் பொன்னாய் மின்னுகின்றன. இது, நல்லவர்களோடு சேர்ந்தால்
தீயவர்களும் குணம் மாறுவார்கள் என்பதைக் காட்டுவது போல் இருப்பதாகக் கம்பர்
அழகுறப் பாடியுள்ளார். அது சரி, கவிச்சக்ரவர்த்தி என்று சும்மாவா சொன்னார்கள்!
இது பற்றி உங்கள் கருத்து?...