மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்! மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பு!

இந்திய அரசின்  மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு (நீட்) இந்தாண்டு மேலும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின்படி பொதுநுழைவுத்தேர்வு வைப்பது மிகப் பெரும் அட்டூழியம் என்று தமிழ் மக்கள் கதறக் கதறக் காதில் வாங்காமல் மத்திய அரசு கொண்டு வந்த இந்தத் தேர்வு, கடந்த ஆண்டு மாணவி அனிதா அவர்களின் உயிரைக் குடித்தது. போதாததற்கு, இந்த நுழைவுத்தேர்வுக்கு எதிராகப் போராடிய ஒரே மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கிய மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தின் பழிவாங்கும் போக்கு இந்த ஆண்டு மாணவர்கள் இருவரின் தந்தைமார்களைப் பலி வாங்கியிருக்கிறது. திடீரென்று ஏற்பட்ட அலைச்சல், மன உளைச்சல் போன்றவையே இவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என அனைவரும் குற்றம்சாட்டும் சூழலில் இது குறித்து மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பாக இங்கே உங்கள் பார்வைக்கு!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.