இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்?

Who discovered the Sea Route to India?
நாம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (Vasco da Gama) இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடித்தார் என்று வரலாறு கூறுகிறது. அவர் வந்த காலம் 15ஆம் நூற்றாண்டு (1498).

உண்மையில் அவர் ஏன் இங்கு வந்தார்?......

பழங்காலத்தில் போர்த்துக்கீசியர்களுடன் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கான அவர்களின் முக்கிய ஏற்றுமதி மிளகு. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வரக் காணவில்லை. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள் என்பது மட்டும்தான் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து விட்டுப் போன வணிக உறவைப் புதுப்பிக்க நூறு ஆண்டுகளாகத் தேடி அலைந்து கடைசியாக வந்து சேர்ந்தவர்தாம் வாஸ்கோ ட காமா.

சரி, அப்படிப் போர்த்துக்கீசியர்களுக்கு மிளகு ஏற்றுமதி செய்து வந்த அந்த மக்கள் யார்?

அவர்கள்தாம் தமிழர்களாகிய நாம்!

13ஆம் நூற்றாண்டு வரை கிரேக்கம், போர்ச்சுக்கல், எகிப்து, சீனம் போன்றவற்றுடன் தமிழர்கள் வணிக உறவு வைத்து இருந்தார்கள் என நான் கூறவில்லை நமது இந்தியத் தொல்பொருளியல் ஆய்வு கூறுகிறது!

மேலும் எரித்திரேயக் கடலில் பெரிப்பிளசு (Periplus of the Erythraen Sea) எனும் கிரேக்க நூலில் பொ.ஊ.மு.7ஆம் நூற்றாண்டுக்கு (BCE 7th Century) மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழர்களுக்குக் கடல் பரப்பில் இருக்கும் மக்களுடன் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆக வாஸ்கோ ட காமாதான் இந்தியாவுக்கான கடல் வழியைக் கண்டு பிடித்தார் என்பதே தவறு! தமிழும் தமிழர்களும் அதற்குப் பல காலம் முன்பே உலகம் முழுதும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை.

எரித்திரேயக் கடலில் பெரிப்பிளசு, எரித்திரா தலாஸ்ஸாவில் ரோமானியப் பொருளாதாரக் கொள்கை ஆகிய பழம்பெரும் நூல்களில் தமிழர்கள் பற்றியும், தமிழர் ஆளுமை பற்றியும் கூறப்பட்டுள்ள மேலும் சில விவரங்கள் இங்கே படங்களாக உங்கள் பார்வைக்கு
Historical facts about Tamils and their Naval Supremacy in Periplus of the Erythraean Sea

Historical facts about Tamils in Roman Economic Policy in the Erythra Thalassa

எழுத்து: ஷியாம் சுந்தர்
 • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
 • 2 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. மிக்க நன்றி! நீங்கள் ரசித்த இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் தொடர்ந்து இதழுக்கு வருகை புரியுமாறும் கேட்டுக் கொள்கிறோம்!

    நீக்கு

  Blogger இயக்குவது.