#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (5) | காணொலித் தொடர்

Namathu Kalam TV

மிழர்களே! இதோ, இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியை உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 50%க்கும் மேல் என்ற புள்ளிவிவரத்தை அறிந்ததும், நாட்டை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பவர்களாகத் திகழும் நம் மகளிர் இனத்தின் தேவைகள் என்ன, வரப் போகும் புதிய அரசிடம் தமிழ்ப் பெண்கள் எதிர்பார்ப்பவை என்ன என்பவை பற்றி அவர்களிடம் கருத்துக் கேட்கலாமே என்று தோன்றியது. அப்படி நடத்திய கண்ணோட்டத்தை ஐந்து காணொலிகளாகப் பகுத்து இதுவரை நான்கு பாகங்களை உங்கள் முன் வைத்தோம். இந்த மூன்று நாட்களில் நீங்கள் அவற்றுக்கு அளித்த ஆதரவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறோம்.

இதே ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குவீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இத்தொடரின் கடைசிப் பாகமான ஐந்தாம் காணொலி இதோ உங்கள் முன்!

நண்பர்களே, ‘நமது களம்’ இணைய இதழ் மூலம் இலக்கிய நயமிக்க சிறுகதைகள், நேயர் கவிதைகள், தன்முன்னேற்றத் தொடர்கள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பலவற்றையும் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்தோம். இருப்பினும் இணைய உலகைப் பொறுத்த வரை மக்களான உங்களை அதிகம் நெருங்கக் காட்சி ஊடகம் இன்றியமையாதது என்பதை உணர்ந்து முதல் முயற்சியாக இந்த மக்கள் கண்ணோட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்த நான்கே காணொலிகளில் இதுவரை 354 பார்வைகள், 57 விருப்பக்குறிகள் (likes) ஆகியவற்றை அள்ளிக் கொடுத்ததோடு 22 பேர் வாடிக்கையாளர்களாகவும் (SUBSCRIBERS) இணைந்து எங்களுக்குப் பேரூக்கம் அளித்திருக்கிறீர்கள். உங்கள் ஆதரவு இன்னும் பல்வேறு காணொலிப் படைப்புகளை உருவாக்க எங்களைத் தூண்டுகிறது. விரைவில் புதிய ஆக்கங்களுடன் உங்களைச் சந்திப்போம்!

அதுவரை நன்றி! வணக்கம்! ஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்

முந்தைய பாகங்கள்:

எங்களுடைய இந்த முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால் காணொலியின் இடது மேல் மூலையில் உள்ள SUBSCRIBE பொத்தானை அழுத்தி எங்களை ஊக்குவியுங்களேன்!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.