‘தீட்டு’ - நீக்கப்பட வேண்டிய சொல்
மங்கையராய்ப் பிறப்பதற்கு
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!
மாதவிடாய் ஒரு ‘தீட்டு’!
அகராதியில்
திருத்தம் செய்திடல் வேண்டுமம்மா!
வடிந்து விழும் இரத்தத்தின் அணுவில்
ஒட்டிக்கொண்டு விந்து சேர்ந்ததுதான்
இந்த மனிதப் பிரபஞ்சத்தின் சாம்ராஜ்யம்மா!
உயிர் நரம்பை அறுத்துவிட்டது போல்
பெரும் வலி
தண்டுவடத்தின் எலும்பை
இழுத்துப் பிடித்து ஓங்கி அடித்தது போல்
பெரும் வலி
மார்பைப் பாறாங்கல் கொண்டு
இணைத்துக் கட்டியது போல்
பெரும் வலி
இடுக்கில் ஏற்படும் எரிச்சலுக்கு
இலக்கியத்திலும்
உவமைக் குறைபாடு
வரம் கொண்டு உங்கள் கடவுள் வந்தாலும்
எழ இயலாப் பெரும் வலி
சுருண்டு கிடந்த நிமிடத்தில் வந்த
சிந்தனை தான் இது.
புனிதம்
பக்தி
பரவசம்
இதற்கெல்லாம் தீண்டாமை
தாய்மை
தாலாட்டு
தலைமுறை
உனக்கு இல்லாது போய்விடும்!
எழுத்து: தனலெட்சுமி | கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்
முகத்தில் அறையும் நிஜம் தோழி!! உரக்கச் சொல்லியிருக்கிறீர்!! வாழ்த்துகளும் நன்றியும்
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நமது நன்றி மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே! நீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!
நீக்குசிறந்த படைப்புக்கு சிறப்பு பாராட்டுக்கள் 👏
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நமது நன்றி! நீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!
நீக்குஅருமையான கவிதை!
பதிலளிநீக்குகீதா
உங்கள் பாராட்டுக்கு நமது நன்றி கீதா அவர்களே! நீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!
நீக்கு