உழைப்போர் உலகம்! - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு

அன்பிற்கினிய நமது களத்தினரே,

நமது களம் வெளியிட்ட ‘தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன?’ எனும் காணொலியை நீங்கள் பார்த்து ஆதரவளித்தீர்கள் இல்லையா? அந்தக் காணொலியை உருவாக்கி அளித்த நம் அதே நண்பர் குழுவினர் உழைப்பாளர் திருநாளும் அதுவுமாகத் தாங்களே புதிய யூடியூப் தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர். கிளிக்கு அண்டு ஷூட்டு கிரியேஷன்ஸ் எனும் தங்கள் தொலைக்காட்சிக்காக நமது களத்துடன் இணைந்து அவர்கள் படைத்துள்ள முதல் படைப்பே உலகின் பெரும் போற்றுதலுக்குரிய உழைப்பையும் உழைப்பாளர்களையும் சிறப்புச் செய்வதுதான். தாங்களே பாடல் எழுதி, இசையமைத்து, பின்னணி சேர்த்து, கண்கவரும் வண்ணம் காட்சிப்படுத்தியும் உள்ள அவர்களின் இந்த நல்முயற்சியை நமது இதழ் மூலம் இதோ உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமைப்படுகிறோம்! 

பார்த்து மகிழ... பகிர்ந்து உதவ... விருப்பக்குறி அளித்து ஊக்குவிக்க...
நிறைகுறைகளைத் தெரிவித்துச் செம்மைப்படுத்த...
வாடிக்கையாளராகி (SUBSCRIBER) வளர்த்து விட
அன்போடு அழைக்கிறோம்!
ஆக்கம்: Click & Shoot Creations
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.