இளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் கொண்டாடும் முயற்சி


இளையராஜா!

பண்ணைபுரத்தில் பிறந்த இசை நதி!
அண்ணன் பாவலர் உடன் சேர்ந்து வற்றாத ஜீவ நதியானது.

சென்னையில் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை அறிவையும் நுட்பமான நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். பியானோ கற்றுக் கொள்ளச் சென்றவர் ஆர்மோனியம், கிடார், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளையும் தன் வசக்கருவிகளாக்கினார். சலீல் சவுத்ரி, ஜிகே வெங்கடேஷ் போன்றவர்களிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து மேலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.

அவரின் 33ஆவது வயது புலர்ந்தது நல்ல பொழுது. அன்னக்கிளியில் எண்ணக்கிளிகளைப் பறக்க விட்டு மண்ணையும் விண்ணையும் இசைச் சிறகுகளால் அரவணைத்துக் கொண்டார். திருவாசகத்தைத் தன் இசை வசமாக்கியதால் சிவபெருமானும் இளையராஜாவுக்கு பக்தன் ஆனான்.

அண்ணாமலை, காமராசர் பல்கலைக்கழகங்களில் பெற்றார் கௌரவ டாக்டர் பட்டம். ஐந்து முறை தேசிய விருதுகள், சிம்பொனி இசைக்காக மேஸ்ட்ரோ பட்டம் , இந்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள்.

How to name it? Nothing but wind! இசையின் இருவேறு பரிணாமம். ரசிகர்களுக்குக் காலம் கடந்தும் ஆகவில்லை செரிமானம். பஞ்சமுகி ராகம், தஞ்சமானது ராக தேவனிடம். உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் பட்டியலில் ஒன்பதாம் இடம் ஒதுக்கப்பட்டது நம் தமிழனுக்கு.

20 ஆயிரம் மேடைக் கச்சேரிகள், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைப்பு, ஏழு ஆயிரம் பாடல்களை உருவாக்கியது என இசையின் இறைவனாக இதயத்தில் இயங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு அவரது 76ஆவது பிறந்தநாளில் இதோ ஓர் ரசிக சமர்ப்பணம்!

ஆக்கத் தலைமை: பிரகாஷ் சங்கர் 

எழுத்து குரல்: எம். ரசூல் ஜெயபதி 

ஒளிப்பதிவு: ஹரீஷ் தேவ் 

தொகுப்பாளர்: எம்.கருப்பசாமி 

தயாரிப்பு மேலாளர்: மெய்யப்பன் 

இயக்கம்: கார்த்திக் சுப்பிரமணியன் 
 • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
 • 2 கருத்துகள்:

  1. இளையராஜா இசை என்பது சொல்லத் தேவையே இல்லை. கிராமத்திலிருந்து வந்து இசை நுணுக்கங்கள் கற்று அவருக்கு இயற்கையிலேயே அந்த இசை மனதுள் அவர் உடலில்ஒன்றிக் கலந்து ஊறிய ஒன்று. ஒவ்வொரு இசைக்கருவிக்கும் அவர் நோட்ஸ் எழுதுவாராம் என்னை மிகவும் வியப்படைய வைத்த செய்தி அது. அவர் ராஜாதான்.

   மன்னிக்கவும்...இசை இறைவன் என்று சொல்ல வேண்டுமோ என்று மட்டும் தோன்றியது.

   எனக்கும் அவர் இசை மிகவும் பிடிக்கும்.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் ரசனைமிகு கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி கீதா அவர்களே!

    தமிழ்ப் பண்பாட்டைப் பொறுத்த வரை, மனிதரும் தெய்வமும் வெவ்வேறில்லை என்பது தாங்கள் அறியாததில்லை. நல்ல முறையில் வாழ்ந்து மறைந்தவரைத் தெய்வமாகப் போற்றுவதே தமிழர் பண்பாடு. எனவே வாழ்வையே இசைக்காகக் கொடையளித்த இளையராஜா அவர்களை வாழும் இறைவனாகப் போற்றுவது தவறில்லை என்பது எங்கள் பணிவன்பான கருத்து. மன்னிப்பு போன்ற பெரிய சொற்கள் வேண்டியதில்லையே! உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாகக் கூறலாம். காரணம் இது நமது களம்!

    நீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்! மிக்க நன்றி!

    நீக்கு

  Blogger இயக்குவது.