எம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை!


"ராட்சசப் புகழ் ஒன்று எழுந்து நிற்கும். ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்" எனும் பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளை நிஜமாக்கியவர் மகேந்திர சிங் தோனி!

தொண்ணூறுகளின் கிரிக்கெட் நாயகன் சச்சின் என்றால் ஒட்டுமொத்த இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் பிதாமகனாக திகழ்கிறார் எம்.எஸ்.தோனி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றி மீது கொண்ட நேர்கொண்ட பார்வைதான் பலதரப்பட்ட ரசிகர்களையும் அவருக்கு பிகிலடிக்கச் செய்தது!

ஆடுகளத்தில் மூன்றாம் நடுவரின் முடிவான டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம் எனும்  டி.ஆர்.எஸ்ஸை இந்திய ரசிகர்களுக்காக ‘தோனி ரிவ்யூ சிஸ்டமாக’ மாற்றிக்காட்டிய வித்தைக்காரர்!

போட்டி முடிவு வெற்றியோ தோல்வியோ தோனியின் முகபாவனை என்றுமே வேறுபடாது!

100 சதங்கள் என்கிற சாதனையைப் படைத்தவர் அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்த சாதனைக்குச் சொந்தக்காரர். உலக கிரிக்கெட்டில் வெற்றிகரக் கேப்டன் எம்.எஸ்.தோனி.

இந்திய அணியோ சி.எஸ்.கே அணியோ உள்ளூர் மைதானமும் வெளியூர் மைதானமும் தோனி விளையாடினால் அது அவரின் சொந்த மைதானம் ஆகிவிடுவது அவர் சிறப்பு.

பேருக்குப் பல கேப்டன்கள் இந்திய அணிக்கு இருந்தாலும் என்றென்றும் களத்தில் தோனியே சிறந்த கேப்டன்.

மொழிகள், நாடுகள் கடந்து ரசிகர்களுக்கு தோனியை கொண்டாடக் காரணம் ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தோனி ரசிகர்களை ரசிக்கும் தன்னிகரற்ற தலைவன்.

உலகக் கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர ஆட்டக்காரர்களையும் தன் செயல்களால் ரசிகர்களாக மாற்றியதே தோனியின் திறமைக்குச் சான்று.

எவ்வளவு பரபரப்பான நிலையிலும் பதறாமல் நிதானமாகச் செயல்படுவது ஏனென்றால் கூட்டத்திற்காக ஆட்டத்தை ஆடுபவர் அல்ல தோனி, நாட்டிற்காகத் தன் ஆட்டத்தை ஆடும் நம்பிக்கை நாயகன்.

வங்கதேசக் கிரிக்கெட் ரசிகன் தோனியின் ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்க ஐ.சி.சி-யிடம் வழி கேட்டபோது "தோனி ஸ்டம்புக்கு பின்னால் இருந்தால் கிரீசுக்கு வெளியில் இறங்க வேண்டாம்" என்று சொன்ன சிறப்புக்குரிய உலகின் அதிக ஸ்டம்பிங் செய்த இந்திய விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட்டின் ஆண்டவர் சச்சின் என்றால் கிரிக்கெட்டையே ஆண்டவர் மகேந்திர சிங் தோனி மட்டுமே!

தோனியின் சாதனையைப் பாராட்டி இந்திய அரசு 2009-இல் பத்மஸ்ரீ விருதும் விளையாட்டில் உச்சம் தொட்ட வீரருக்கு அளிக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2018-இல் பத்ம பூஷண் விருதும் அளித்துப் பெருமைப்படுத்தியது.

இங்கிலாந்தின் டி மான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 2011-இல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது.

இந்தியப் பிராந்திய ராணுவம் லெப்டினன்ட் கர்னல் பதவியை தோனிக்கு அளித்துத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

மாஹி, கேப்டன் கூல், தல என்று ரசிகர்களால் அளவற்ற அன்புடன் அழைக்கப்படுபவர் தோனி.

கிரிக்கெட் என்பது கடல் என்றால் அதில் எம்.எஸ்.தோனி இந்தியப் பெருங்கடல்.

அதில் ஒரு துளி ஒரே ஒரு துளி நீரை உங்கள் மீது தெளிக்கிறோம்!

ஹாப்பி பர்த்டே மாஹி!

ஆக்கத் தலைமை குரல்: பிரகாஷ் சங்கர் 

எழுத்து உதவி இயக்கம்: பாலாஜி 

ஒளிப்பதிவு: வி.ஜி.விக்னேஷ்வர் 

தொகுப்பாளர்: எம்.கருப்பசாமி 

ஒலிப்பதிவு: கார்த்திக் சுப்பிரமணியன் 

இயக்கம்: ஹரீஷ் தேவ் 
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.