தேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா? - இதோ மாதிரிக் கடிதம்

Model letter for comment on NEP 2019

ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன்ற சமூக அக்கறையுள்ள கலைஞர்கள் வரை அனைவரும் விளக்கி விட்டார்கள். அனைவரும் ஒருமித்த குரலில் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் "இந்தக் கல்விக் கொள்கை வரைவு குறித்த உங்கள் கருத்துக்களை அரசுக்கு அனுப்பி வையுங்கள்" என்பது. 

எளிதாகச் சொல்லி விட்டார்கள். ஆனால், 

* ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே முழுமையாக வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவைப் படித்துப் புரிந்து கொள்வது இங்கு எத்தனை பேரால் முடியும்?

* அப்படியே ஆங்கிலம் / இந்தி தெரிந்தாலும், இதை அமல்படுத்தினால் நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை வெறுமே இந்த வரைவைப் படித்தவுடன் விளங்கிக் கொள்ளும் அளவுக்குப் புரிதல் இங்கு எத்தனை பேருக்கு உண்டு? 

* அப்படி விளங்கிக் கொண்டாலும் அது பற்றித் தங்கள் கருத்தைக் கோவையாக எழுத்தில் வடித்து அனுப்பி வைக்கும் எழுத்தாற்றல் இங்கு எத்தனை பேருக்கு இருக்கும்? 

*  அப்படிப்பட்ட எழுத்தாற்றல் கொண்டவர்களிலும் எத்தனை பேருக்கு அதைச் செய்ய நேரம் இருக்கும்? 

இவையெல்லாம் யாராலும் விடையளிக்க முடியாத கேள்விகள். இது குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்கு அரசு அளித்த காலக்கெடு இந்த மாத இறுதியோடு (31.07.2019 அன்று) முடிவடைகிறது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மேற்கூறிய தடைகளையெல்லாம் கடந்து தங்கள் கருத்துரையை அனுப்பி வைப்பது என்பது எல்லாராலும் முடியாது. 

எனவே இதோ கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வி தொடர்பாகக் களப் பணி ஆற்றும் தன்னார்வத் தொண்டர்கள் போன்ற அத்தனை பேரின் கருத்துக்களையும் எதிரொலிக்கும் வகையில் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட மாதிரிக் கடிதத்தை உங்கள் முன் வைத்துள்ளோம்!

படித்துப் பாருங்கள்! இந்தக் கருத்துக்கள் அனைத்தும் சரியானவைதாம் என உங்களுக்குத் தோன்றினால் அப்படியே அந்த ஆங்கில மடலை நகலெடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து nep.edu@nic.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்! இதோ மாதிரிக் கடிதம் பின்வருமாறு:

To the Joint Secretary (Internal Security-I), Ministry of Human Resource Development,

I am grateful to the Ministry of Human Resource Development for making public the Draft New Education Policy, 2019, and for providing sufficient time for comments to be submitted.

The information provided in the draft National educational policy 2019 and its serious implications:

1. The draft proposes drastic change in the current schooling system by proposing new 5-3-3-4  design,  Unless and until equality in accessing education is assured, the proposed change would be useless as it would not bring any change in the current situation of educational disparities.

2. The draft proposes formal schooling system from the age of 3.

3. National level Testing would be conducted to check children’s learning ability in the class 3, class 5 and class 8.

But assessing their ability in the smaller classes through examination and retaining them in the same class once they have failed will affect children psychologically and brings inferiority complex. This will make pool of children to stay out of schooling.

4. Classes 9 to 12 would be considered as secondary education and board examinations will be conducted in every 8th term.

5. All school students must receive vocational education in at least one vocation from class 8 to class 12.

6. Any private board permitted by government could give examination certificate to schools for conducting examinations.

7.  A school could select its certifying authority as private board or state board or central board of examination.

8. 15 years of schooling and pass certificate of class 12 are not enough for entering into the colleges.

9. A student must be qualified in pan-India examination to be conducted by national testing agency.

10. For any course from B.Sc, to B.A, there would be national eligibility examination like NEET.

• The proposals in 8,9,10 clearly show the intention to keep majority of the students out of higher education.

11. One could become doctor only after clearing EXIT examination even after clearing M.B.B.S final exam. NEET, an entry level examination itself has proved to be dangerous as poor students could not aspire to become doctor. Increasing suicidal deaths among poor students is the worst reality in India. Those poor who have crossed the NEET struggle and entered graduation would also now lack any possibility to become doctor because additional burden of EXIT exam will check their entry. Both the examinations will make private coaching institutes to bloom and only rich could afford the training and would become doctor. This policy would trouble lakhs and lakhs of poor families and future of children belonging to vulnerable sections.

12. It will be a burden for a child to concentrate on three languages instead of concentrating on basic subjects.

13. There is no clarity over which language would be the basic one for learning and teaching.

14. Public schools which has low enrollment and poor infrastructure should be brought together to form one school complex.

15. All school teachers will be required to complete 4 year integrated degree in teaching universities, closing all teacher training colleges.

16. No more promotion and wage increment for teachers based on teaching experiences. There will be intermittent examinations conducted to check teaching ability and performance. Based on that, promotion and wage increment will be provided.

17. University would stop conferring degrees hereafter. Colleges should develop all required capacities to confer degree itself to its students. If a college doesn’t have that capacity, it should stop functioning.

18. The new education policy spearheads the privatisation of education ignoring the role of government.

19. All universities will be ranked in the order of 1, 2, 3 or 4 and act as Higher Educational institutions.

20. No differentiation between public and private universities.

21. Universities can be set up by foreign universities.

22. There is no surety for Tamilnadu to continue with 69% reservation in education.

23. The continuance of educational grants and scholarships to the students based on social and educational backwardness as criteria has no passing reference in the draft. Instead, the merit or economic backwardness would be the sole criteria for scholarships.

24. The draft gives more important to Sanskrit language, ignoring the importance of growth of other Indian languages.

25. Policy suggests lot of changes like a single body for policy making which would lead to huge centralization of education.

26. There is no reference about student elections in colleges and universities for their representation and participation in the college administration. This democratic right of students is ignored by this draft.

The national educational policy cannot be a policy which is against the core principles of cooperative federalism, social justice, democratic principles, equality of opportunities and right to education envisaged in our constitution. We request the MHRD to withdraw this Policy and also request the  Tamilnadu government should assert its rejection to the central government, conceding to the voices of educationalists and civil society.

Thank you,


    

தயங்காதீர்கள் நண்பர்களே! இப்பொழுது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் முப்பது கோடி மாணவர்கள் மட்டுமில்லை இனி வரும் நம் தலைமுறைகளின் கல்வி உரிமையையும் தீர்மானிக்கும் மிக முக்கிய நடவடிக்கை இது. சூர்யா சொன்னதையேதான் மீண்டும் நினைவூட்டுகிறோம் "நாம் எல்லாரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும்!"

எனவே உடனடியாக உங்கள் கருத்தை அரசுக்கு அனுப்புங்கள்!

நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்! 

* * * * *

அரசு வெளியிட்டுள்ள ஆங்கில வரைவைப் படிக்க - National Education Policy 2019 Draft 

அரசு வெளியிட்டுள்ள தமிழ் வரைவுச் சுருக்கத்தைப் படிக்க - தேசியக் கல்விக் கொள்கை 2019 - வரைவுச் சுருக்கம்

எழுத்தாளர் விழியன் குழுவினர் வெளியிட்டுள்ள முழுமையான தமிழ் வரைவைப் படிக்க - தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு

மாதிரிக் கடிதம்: நன்றி saveeducation.in    |    கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்
 • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
 • 6 கருத்துகள்:

  1. அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் கருத்துக்கு முதலில் நமது நன்றி!

    நல்ல கல்வி எனும் கனவு அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்தப் புதிய கல்விக் கொள்கை வந்தால் இருக்கிற கல்வி வாய்ப்புக் கூடக் கனவாய்ப் போய்விடுமோ எனும் அச்சமே மேற்படி பதிவுக்குக் காரணம். எனவே உடனே அந்த ஆங்கிலக் கடிதத்தை நகலெடுத்து குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்! முடிந்தால் இந்தப் பதிவையும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மற்றவர்களும் தங்கள் கருத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டுகிறோம்! நன்றி!

    நீக்கு
  2. அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் கருத்துக்கு முதலில் நமது நன்றி!

    நல்ல கல்வி எனும் கனவு அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்தப் புதிய கல்விக் கொள்கை வந்தால் இருக்கிற கல்வி வாய்ப்புக் கூடக் கனவாய்ப் போய்விடுமோ எனும் அச்சமே மேற்படி பதிவுக்குக் காரணம். எனவே உடனே அந்த ஆங்கிலக் கடிதத்தை நகலெடுத்து குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்! முடிந்தால் இந்தப் பதிவையும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மற்றவர்களும் தங்கள் கருத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டுகிறோம்! நன்றி!

    நீக்கு
  3. Education is not a business . National education policy draft 2019 is help to business man for increasing their business in private institute .The sociality and equality will fail if the policy came. We never accept this.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கருத்தை வெளியிடத் தாமதமானதற்கு வருந்துகிறோம்! உவப்பான உங்கள் உணர்ச்சிமிகு கருத்து நமது நன்றி!

    நீக்கு

  Blogger இயக்குவது.