தமிழினப்படுகொலைக்கு வீட்டிலிருந்தே நினைவேந்துவோம்! | மே பதினேழு இயக்கம் அழைப்பு

Invitation for Genocide Commemmoration 2020

மிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!

ஒன்றரை இலட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா?

ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்த நினைவேந்தல் இந்த முறை கொரோனா தொற்றின் காரணமாக வீடுகளிலிருந்து கடைப்பிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பேரரசுகளோ, பெருந்தொற்றுகளோ நம் உள்ளத்தில் எழும் குமுறலையும், நம் கண்ணீரையும், நம் உறுதியையும் எப்படித் தடுத்துவிட முடியும்?

மே 17ஆம் நாள், ஞாயிறு மாலை 6 மணிக்கு தமிழீழ இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி உங்கள் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி நின்று முழக்கமிடுங்கள்! அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள்!

மாலை 6:30 மணிக்கு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உங்கள் குடும்பத்துடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நினைவேந்துங்கள்!

"இனப்படுகொலையை மறக்க மாட்டோம்" என்ற முழக்கம் சமூக வலைத்தளங்களின் மூலமாக உலகெங்கும் உள்ள மனித சமூகத்தின் காதுகளை எட்டட்டும்.

  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.