பன்னாட்டுத் தமிழ் மற்றும் தொடர்பியல் ஆய்வு மையம்! - இணையவழித் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வாரீர்!

International Research Centre for Tamil and Communication Studies

லகத் தமிழ்ப் பெருமக்களே!

இதோ தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் இன்னோர் அணிவைரம் பதிக்கும் முயற்சி! தமிழுக்கும் தொடர்பியலுக்கும் என ஒரு பன்னாட்டு ஆய்வு மையம்! International Research Center for Tamil and Communication Studies! 

தமிழும் தமிழர்களும் உலகம் முழுதும் பரவி வாழ்ந்தாலும் நம் மொழிக்கென இயங்கும் பன்னாட்டு ஆய்வு மையங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே அந்தப் பட்டியலையும் தமிழையும் ஒருங்கே வளர்க்கும் நோக்கில் ‘நமது களம்’ இணைய இதழின் ஆசிரியரும் அவர் நண்பர்களும் இணைந்து தொடங்கியிருப்பதே இந்தப் பன்னாட்டுத் தமிழ் மற்றும் தொடர்பியல் ஆய்வு மையம்.

அரசோ பெரிய கல்வி அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டிய இந்த மாபெரும் பணியைத் தங்கள் தமிழ் ஆர்வத்தையும் சமுக அக்கறையையும் துறைசார் தகுதியையும் மட்டுமே துணையாய்க் கொண்டு தொடங்கியிருக்கும் இந்தத் தோழர்களுக்கு ஊக்கமளிக்க நாளை நடைபெற உள்ள ஆய்வு மையத் தொடக்க விழாவிலும் உடன் நடக்க உள்ள கருத்தரங்கிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களே, கல்வியாளர்களே, தமிழறிஞர்களே, துறைசார் வல்லுநர்களே, உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கிறோம்!

விவரங்கள் கீழே உள்ள படத்தில்!

நன்றி!

IRCTCS-Inaugaration Ceremony Invitation & Schedule

  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.