பொறுப்பாகாமை அறிக்கை | Disclaimer

http://www.namathukalam.com இணையத்தளத்தில் (‘தளம்’) இடம்பெறும் புனைவுகள் (fictions) அனைத்தும் கற்பனையே! யாரையும் எதையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுபவை அல்ல. அப்படிக் குறிப்பிடுவது போல் எங்கேனும் தென்பட்டால் அது தற்செயலே!

தளத்தில் இடம்பெறும் அல்புனைவுகள் (non-fictions) அனைத்தும் தகவல் அடிப்படையிலானவையே. ‘நமது களம்’ (‘இதழ்’) ஆசிரியக் குழுவினரின் அறிவுக்கு எட்டிய வரையில் சரியானவை என உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவை வெளியிடப்படுகின்றன. அதையும் மீறி அவற்றில் ஏதேனும் பிழையோ விடுபாடோ ஏற்பட்டால் அதற்கு இதழ் பொறுப்பில்லை. அல்புனைவுகளை நம்புவதும், கடைப்பிடிப்பதும், பின்பற்றுவதும், முயல்வதும், எடுத்தாள்வதும், இவற்றுள் எதையுமே செய்யாமல் தவிர்ப்பதும் பயனரின் சொந்த முடிவுக்கு உட்பட்டவை. அதன் காரணமாக நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, தொடர்ச்சியாகவோ, திடீரெனவோ ஏற்படக்கூடிய எந்த ஒரு சீர்குலைவுக்கோ, இழப்புக்கோ, உளைச்சலுக்கோ இதழ் பொறுப்பாகாது.

இதழின் பெயரில் இல்லாமல் மற்றவர் பெயரில் வெளியாகும் படைப்புகளும் அவற்றின் உட்கூறுகளும் அப்படைப்புகளுக்காக இதழின் சார்பில் சேர்க்கப்படுபவையும் அவ்வப் படைப்பாளிகளின் சொந்தப் பொறுப்புக்கு உட்பட்டவை. இதழ் எந்தச் சூழ்நிலையிலும் எந்த வகையிலும் அவற்றுக்குப் பொறுப்பேற்க இயலாது. எந்த நேரத்திலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தளத்திலும் அதன் உள்ளடக்கங்களிலும் எதையும் நீக்கவும் சேர்க்கவும் மாற்றவும் திருத்தவும் நிறுத்தவும் இதழுக்கு முழு அதிகாரம் உண்டு.

தளத்தில் கருத்துரைப் பகுதியில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர் சொந்தக் கருத்துக்களே. இதழால் வெளியிடப்பெறும் கருத்துக்கள் தவிர மற்ற கருத்துக்களுக்கு எந்த விதத்திலும் இதழ் பொறுப்பாகாது.

தளத்தில் இடம்பெறும் வெளியிணைப்புகள் தகவல் அடிப்படையிலும் மேற்கோள் காட்டுதல், நன்றி நவிலுதல் போன்ற காரணங்களுக்காகவும் சட்டப்படி/முறைப்படி காட்சிப்படுத்த வேண்டிய முறைமைக்காகவும் மட்டுமே எடுத்தாளப்படுகின்றன. அவ்விணைப்புகளுக்குரிய இணையத்தளங்களுக்கும் இதழுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. அவ்விணைப்புகள் தொடர்ந்து இயங்குவதற்கும், அத்தளங்கள், அவற்றின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் இதழ் எந்த வகையிலும் பொறுப்பாக இயலாது.

தளத்தின் அடைப்பலகை (template), பக்கச் செயலிகள் (widgets), செருகிகள் (plug-ins), இன்ன பிற நிரலிகள் (scripts) எதுவும் இதழுக்குச் சொந்தமானவையோ, இதழினரால் உருவாக்கப்பட்டவையோ அல்ல. இவற்றைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்த உறுதிப்பாட்டையும் (guarantee) இதழால் வழங்க இயலாது. இவற்றின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றுக்கு எந்த நிலையிலும் இதழ் பொறுப்பில்லை.

மேற்படி ‘தளம்’ எனும் சொல் http://www.namathukalam.com இணையத்தளம், அதன் குறுஞ்செயலி, ‘நமது களம்’ மென்படி (pdf) வடிவம், ‘நமது களம்’ இதழின் இன்ன பிற வடிவங்கள், வெளியீடுகள் ஆகிய அனைத்தையும் குறிக்கும்.

மேற்படி ‘இதழ்’ எனும் சொல் ‘நமது களம்’ இதழ், அதன் ஆசிரியர், ஆசிரியக் குழுவினர், இன்ன பிற ஊழியர்கள், பணியாளர்கள் ஆகிய அனைவரையும் குறிக்கும்.

கடைசியாக இற்றைப்படுத்தியது (Last Updated): 02.11.2017
Blogger இயக்குவது.